YouTube Create

3.7
12.3ஆ கருத்துகள்
1மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
பெற்றோருக்கான வழிகாட்டல்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

YouTube வழங்கும் அதிகாரப்பூர்வ எடிட்டிங் ஆப்ஸான YouTube Create மூலம் உங்கள் வீடியோக்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லலாம். ஃபில்டர்கள், எஃபெக்ட்டுகள், உரிமத்தொகை இல்லாத இசை, பின்னணிக் குரல், தானியங்கு வசனங்கள் மற்றும் பலவற்றைச் சேர்த்து உங்கள் பார்வையாளர்களைக் கவரும் அற்புதமான வீடியோக்களை எளிதாக உருவாக்கலாம். இவை அனைத்தையும் சிக்கலான எடிட்டிங் கருவிகளின் துணை இல்லாமலேயே செய்யலாம்.

எளிமையான வீடியோ எடிட்டிங் கருவிகள்
• ஒரே இடத்தில் வீடியோக்கள், படங்கள், ஆடியோ ஆகிய அனைத்தையும் எளிதாக ஒன்றிணைக்கலாம்
• வீடியோ கிளிப்புகளை டிரிம் செய்யலாம், கிளிப் செய்யலாம், செதுக்கலாம்
• உங்கள் கிளிப்புகளைத் தடையின்றி ஒன்றிணைக்க 40க்கும் மேற்பட்ட நிலைமாற்றங்களில் இருந்து தேர்வுசெய்யலாம்
• உங்கள் வீடியோவின் வேகத்தை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்

அதிநவீன வீடியோ எடிட்டிங் அம்சங்கள்
• ஒரே தட்டலில் உங்கள் வீடியோக்களில் தானாக வசனங்கள் அல்லது சப்டைட்டில்களைச் சேர்க்கலாம் (குறிப்பிட்ட மொழிகளில் மட்டும்)
• கவனத்தைச் சிதறடிக்கும் பின்புல இரைச்சலை ஆடியோ கிளீன்-அப் கருவி மூலம் எளிதாக அகற்றலாம்
• கட்-அவுட் எஃபெக்ட் மூலம் உங்கள் வீடியோவின் பின்புலத்தை அகற்றலாம்

இசை & ஆடியோ
• உரிமத்தொகை இல்லாத ஆயிரக்கணக்கான இசை டிராக்குகள் மற்றும் சவுண்டு எஃபெக்ட்டுகள் மூலம் உங்கள் வீடியோவிற்கு உயிரூட்டலாம்
• 'பீட் மேட்ச்சிங்' மூலம் உங்கள் சவுண்டு டிராக்கின் பீட்டைக் கண்டறிந்து வீடியோ கிளிப்புகளை அந்த இசையுடன் எளிதாக ஒத்திசைக்கலாம்
• ஆப்ஸில் நேரடியாகப் பின்னணிக் குரலை ரெக்கார்டு செய்து உங்கள் வீடியோக்களை விவரிக்கலாம்

ஃபில்டர்கள் & எஃபெக்ட்டுகள்
• சேச்சுரேஷன், ஒளிர்வு மற்றும் பலவற்றைச் சரிசெய்து வண்ணத்தை மேம்படுத்தலாம்
• பிரத்தியேக ஃபில்டர்கள் மூலம் மனநிலையை வெளிப்படுத்தலாம்
• உங்கள் வீடியோக்களை ஹைலைட் செய்து காட்ட பல்வேறு வகையான எஃபெக்ட்டுகளில் இருந்து தேர்வுசெய்யலாம்

ஸ்டிக்கர்கள் & எழுத்து வடிவங்கள்
• நூற்றுக்கணக்கான எழுத்து வடிவங்கள் மற்றும் அனிமேஷன் செய்யப்பட்ட வார்த்தை எஃபெக்ட்டுகள் மூலம் உங்கள் கிரியேட்டிவிட்டியைச் சேர்க்கலாம்
• எண்ணற்ற ஸ்டிக்கர்கள், GIFகள், ஈமோஜிகள் ஆகியவற்றில் இருந்து உங்கள் ஸ்டைலுடன் பொருந்துபவற்றைத் தேர்வுசெய்யலாம்

பகிர்வதற்கான வசதிகள்
• வெவ்வேறு வடிவங்களில் பகிர, போர்ட்ரெய்ட், லேண்ட்ஸ்கேப், சதுரம் உள்ளிட்ட வெவ்வேறு தோற்ற விகிதங்களில் உங்கள் வீடியோக்களின் அளவை மாற்றலாம்
• வீடியோவை எளிதாக உங்கள் YouTube சேனலில் நேரடியாகப் பதிவேற்றி அதை உங்கள் பார்வையாளர்களுடன் பகிரலாம்
புதுப்பிக்கப்பட்டது:
12 மே, 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், ஆப்ஸ் உபயோகம் மற்றும் ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன்
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.7
12ஆ கருத்துகள்
Elayaraja Mohan
13 ஏப்ரல், 2025
அருமை
இது உதவிகரமாக இருந்ததா?
Kasipllai pastor David uruthiramoorthy
17 ஜனவரி, 2025
Yt create இந்த மொபைல் ஆப்ஸீக்கு ரேட்டிங் வழங்குங்கள் நன்றி
இது உதவிகரமாக இருந்ததா?
Queen Amutha
5 ஜூன், 2024
Nice 💯
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

YouTube Create தற்போது பீட்டா பதிப்பில் உள்ளது, குறைந்தபட்சம் 4 ஜி.பை. RAM கொண்ட Android 8.0 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் மொபைல்களில் கிடைக்கிறது. காலப்போக்கில் நாங்கள் தொடர்ந்து புதிய அம்சங்களைச் சேர்த்து YouTube Createடை மேம்படுத்துவோம்.